Wednesday, July 6, 2011

கழிவுநீர்த்தேக்கம்







யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலை வீதியோரங்களின் அருகாமையில் ஓடும் கழிவுநீர்த்தேக்கம் நீண்டகாலமாக வெளியேறாது தேங்கிநிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்புப்பெருக்கமும் அதிகரிக்கின்றது. இதனால் டெங்கு,மலேரியா போன்ற நோய்கள் பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகினறது. இது மட்டுமல்லாது இக்கழிவுநீர்த்தேக்கத்தின் மத்தியில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி நாம்  வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது இக்கழிவுநீர் நீண்ட காலமாக அகற்றப்படாதுள்ளது. நாம் சுகாதார அதிகாரியிடம் இது பற்றிக்கூறினோம். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகின்றது என்றார். 
 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons