Monday, May 28, 2012

அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறும் முகாம் மக்கள்

இலங்கை இந்தியன் நாடுகளை பிரிக்கும் எல்லைக்கோடான இயற்கைவளம் நிறைந்த காங்கேசன்தறை பகுதியை அண்மித்துள்ள இடங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி ஆகிய இடங்களை சொந்த இடமாக கொண்ட மக்கள்  1990ம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள். மீன்பிடிப்பு, தச்சுத்தொழில், கால்நடைவளர்ப்பு என வாழ்வதாரத்தொழில்களின் மூலம் தமது வாழ்வதாரத்தை தன்னிறைவாக கொண்டிருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் போரின் போதுஅழிக்கமுடியாத சொத்துகளையும், சொந்தங்களையும் விட்டு இடம்பெயர்ந்து வன்னி, வவுனியா என பல பகுதிகளுக்கு சென்று இறுதியாக மல்லாகம் நீதவான் முகாமில் தஞ்சமடைந்து 22 வருடங்களாக அகதி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்கள். அன்று ஆரம்பித்த அகதி முகாம் வாழ்க்கை பல துன்பங்கள், நெருக்கடிகள் என்பவற்றை சந்தித்த வண்ணமும் தமது பிரதேசங்களில் தாம் செய்த வாழ்வதாரத்தொழில்களை இன்று வரையும் செய்து வருகின்றனர்.
அகதி வாழ்வை யாரும் விரும்பமாட்டர்கள் தமது சொந்த மண்ணுக்கு எப்போது மீள்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் காங்கேசன் துறையை அண்டிய பிரதேசங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி, ஊரணி போன்ற பகுதி மக்களும் இடம்பெயர்ந்த பிற்பாடு அவர்களுடைய வாழ்வில் இருள்சுழ்ந்துள்ளது. அடிக்கடி இந்த பிரதேங்களில் யுத்தம் நிகழ்ந்த படியால் மக்களின் சொத்துகள் அளவுக்கதிகாக திருடப்பட்டு சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டு வன்னி பிரதேசங்களுக்கு ஓடிச்சென்று அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதை விட கொடூரமாக பசி, பட்டினி என வாடினார்கள் அங்கு அகதி முகாம் அமைத்துக்கொடுக்கப்படாமையால் இருப்பிடங்களாக சிலர் சொந்தங்களின் வீடுகளிலும், சிலர் வீதிகளிலும் வாழ்ந்தார்கள் அதன் பின்னர் தான் வடக்கின் ஒரு சில பகுதி மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் விடப்பட்டனர். இந்த மக்களும் தமது சொந்த மண்ணை பார்க்கலாம் என்று வந்துள்ளார்கள் ஆனால் அவர்களின் இடங்கள் விடப்படாத நிலையில் இருந்தமையால் அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.  புபபபபபபபபப நறுவனத்தால் மல்லாகத்தில் நீதவான் முகாம்கள் போடப்பட்டு வாழத்தொடங்கினார்கள்.
இடம்பெயர்ந்த அகதிமுகாம் வாழ்கைக்கு 22 வருடங்களாகியும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாதநிலை என்று கூறாம். நல்ல முறையில் குடிதண்ணீர்வசதிகள், மலசலகூடவசதிகள் சரியாக பெற்றுத்தரப்படவில்லைஎன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நிரந்தரமகா தரப்பட்ட வளம் என்றால் வசிப்பதற்கு ஒரு இடமும், 1 இலட்சம் பெறுமதியான இந்த வீட்டுத்திட்டமும் தான். எமது குழந்தைகள் பாடசாலை செல்வதற்கு ஆரம்பத்தில் உதவிகள் செய்தார்கள் அதன் பின்னர் எந்த உதவிகளும் செய்வதில்லை ஆரம்பத்தில் னு, சு, ஊ யுனிசென், னு, சு, ஊ ஆகிய நிறுவனஙகள் உதவிகளை வழங்கிய போது கொஞ்சம் பொருளதார கஸ்ரங்கள் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை குழந்தைகள் பசிதாங்க மாட்டர்கள் அவர்களுக்காக நாங்கள் கஸ்ரப்படுகிறோம் எமக்கு எனியும் பொருட்கள் தரும்படி கேட்கவில்லை யுத்தம் நடந்த எல்லாப்பிரதேசங்களையும் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளார்கள் எங்களையும் எமது சொந்த இடத்திற்கு விடும்படி தான் நாங்கள் இப்போது கேட்டக்கொள்கின்றொhம். என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றார்.
குறித்த நீதவான் முகாமில் 65 வீடுகளுடன் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வேறு இடங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளாக குடிதண்ணீர்பிரச்சனையும், மலசலகூடவசதி இன்மை பிரச்சனையே. மலசலகூடவசதி போதியளவுக்கு இருப்பினும் சகித்துக்கொள்வோம். குடிதண்ணிர் பிரச்சனையை சகித்துகொள்ளமுடியாது இவர்கள் அமைத்துக்கொடுத்த தண்ணீர் குழாயில் வருகின்ற தண்ணீரை எடுத்தக்குடித்தால் நோய்கள் தான்வருகிறது. ( சொறி, சிரங்கு, வாந்திபேதி) அதனால் எமது முகாமை அண்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் எடுத்து வருகிறோhம். என்ன செய்வது நாம் அகதி மக்கள் தானே அனுபவித்து தான் ஆகவேண்டும் என மக்கள் அங்கலாய்க்கின்றார்கள். பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொரு நேரங்களிலும் குடிதண்ணீர் போத்தல்களிலும், கான்களிலும், குடங்களிலும் எடுத்துச்செல்லும் காடசியை நாமும் பர்த்திருக்க தவறவில்லை.
முகாம் வாழ்கையை விட எமது மண்ணில் சிறு குடிசை போட்டு வாழ்ந்தாலும் நிம்மதியுடன் வாழாலாம். ஓவ்வொரு நாட்களும் எப்படி போகக்கூடும் என்று உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. குடும்பத்தை பார்ப்பதற்கு வேலைக்கு போகவேண்டும் ஆனால் எமது தொழில் மீன்பிடித்தொழில் மழை, காற்று என்றால் கடலுக்கு போகமுடியாது அதனால் மிகவும் கஸ்ரமாக உள்ளது. ஆரம்பர வாழ்கை நாம் கேட்கவில்லை அடிப்படை வசதிகள் மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்கிறார்கள்.
இந்த முகாமில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றமாக காணப்படுகின்றமையும் அனைத்து மாணவர்களும் மல்லாகம் மகாவி;த்தியாலத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் இவருடைய கருத்துக்கள் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போது அரசாங்கத்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு மக்களும் தமது கருத்துகளை இங்கு கூறியிருக்கிறார்கள் இதனால் மல்லாகம் நீதவான் முகாமில் வாழுகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பவேண்டும் என்பது எமது விருப்பமும் கூட எத்தனை நாளுக்கு முகாம் வாழ்வில் அகப்பட்டு இருப்பது அவர்களது இருப்பிடங்களை பார்த்தால் கஸ்ரமாக உள்ளது.







 

Monday, May 21, 2012

MORNING STAR – BORN IN MANIPPAY

1834-   acm printing press founded in manippay
1834-   started with 04 workes
1841- when morning star published – 81 workers: 04 printing machenes
1838  to 1855 – all school books were printed
Salary for a worker – 03 slingsts to 25 slings
1841- out of 81 workers 12 workers were the old boys of batticotta seminary
1841- allor then were Christians or christion supports
1841- 26 workers were full communicant members
1841- the morning star born in manippay
Maruthadyppilliyar kovil now on thevery same place parish hall was built

Friday, May 4, 2012

பெண்கள் எதிர்கால கணவனுடன் எதையும் மனம் விட்டுப்பேசமுடியுமா?

பெண்கள் பலர் மனப்பாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் திருமணமான பெண்கள் பல சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்கள் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கூறமுடியாது அவ்வாறு காதலித்தாலும் 50 மூ மட்டும் திருமணபந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள். திருமணத்தின் இணையும் ஒரு பெண் தனது கணவருக்கு தனது பழைய கால வாழ்க்கையை  கூறவேண்டுமா?   என்ற  போராட்டம் வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
கணவன் தனது மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும் போதெல்லாம் அது தப்பானவையாக இருக்கும். அன்பாக  நேசிக்கும் எந்த ஆண்களும் தனது மனைவி; சரியாவை என்றே தோன்றக்கூடும். ஆண்களின் கடந்த கால வாழ்க்கையை பெண்கள்   சுமைகளாக தாங்கிக்கொள்வார்கள். ஒரு ஆண் தனது கடந்த கால வாழ்க்கையை  தனது மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக வாழுகின்றான்.
பெண்ணானவள் குடும்பத்தின் கௌரவம் என்றே எதிர்காலம் ஒப்படைக்கப்படுகிறது. அடிமைத்தனங்களின் திருமணமும் திருமணங்களின் அடிமைத்தனங்களும் பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்தால் சமூகத்தால் மட்டுமன்றி பெற்றோர்களால் தள்ளிவைக்கப்படுகின்றார்கள். எந்த வொரு பெண்ணும் திருமணமானதும் தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்கத்தான் முனைவார்கள். இதில் யார் தவறு செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே  உள்ளது.

Tuesday, April 17, 2012

மேரி கொல்வினின் பேனாமுனை ஓர் ஆயுதமா?

இலங்கை உட்பட உலகின் பல்வேறு   முனைகளுக்கு சென்று செய்தி சேகரித்த உலகின் புகழ்பெற்ற போர் முனை நிபுணர்களில் ஒருவரான  அமெரிக்கா பெண்மணி மேரின் கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு விட்டார்                 என்ற செய்தி சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் மேற்குலக சக்திகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேரிகொல்வினின்   இறப்பு   ஊடகத்திற்கு பெரிய இழப்பு 20.02.2012 அன்று              நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இவர் தன்னுடன் ஒரு போட்டோ இதழியரை   அழைத்து சென்று  விட்டார். என்பது மறக்கமுடியதாதது. இவரின் இழப்பிற்கு பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது          ஊடகவியலாளர்கள்           பலர்       அஞ்சலி செலுத்தியதை நாம் காணத்தவறவில்லை.
இலங்கை பற்றி அவரது பார்வை அதிகமாகவே இருந்தது. இலங்கை மக்களுக்கு             தனது இரண்டு கண்களையும் இழந்தும் தனது போராட்டத்தை   நிறுத்தாமல் தழிழீழ விடுதலைப்புலிகளின் தகவல்களை மேற்குலக நாடுகளில் சமர்ப்பித்தவர். இலங்கை மக்கள் ஒரு தீர்வைப்பெறவேண்டும். இடைக்கால யுத்தத்த்pல் தீர்வு கொண்டு  வரப்பட வேண்டும். நான் எல்லாப்பிரச்சனைகளையும் துணிவுடன் கொண்டு வருவேன் என தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையின்            புகழ் பெற்ற வெளிநாட்டு செய்தியாளர் மேரிகொல்வின் இவர் பிறந்தது அமெரிக்கவில் லண்டனில் வசித்து வந்து ஊடகத்துடன்; தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
வன்முறையை விட பேனா முனை கூரானது  என்பது மேரிகொல்வினின் கருத்து நண்பர் யார் ? எதிரி யார்? என தெரியாமல் மேரிகொல்வின் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார்.                    இந்தப்பாரிய இழப்புக்கும் தோல்விக்கும் வன்முறையே காரணம் என இந்த விடயத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஓரே கருத்தை தெரிவிக்கின்றனர். ஊடகவியலாளரின் பேனா முனை ஒர் அயுதமா? என்ற கேள்விக்குறி-----------------

Tuesday, March 20, 2012

பேஸ்புக் காதல் தீவிரம்

சமூக தொடர்பாடல் என்பது எல்லாக்காலங்களிலும் புதிய வசதிகளையும்- தொழில்நுட்ப மாற்றங்களையும் இலகுவாக தன்னுள் உள்வாங்கி அதன் உச்சக்கட்ட பயனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அது, அரசர் காலத்தில் புறாவினூடு ஓலைகளை அனுப்பியதிலிருந்து இன்று சில கணத்தில் எஸ்.எஸ்.எம் மின்னஞ்சல் என்கிற அதிகவேக தொடர்பாடல் நுட்பங்களாக வளர்ச்சி பெற்றிருக்கிற வடிவங்களினூடும் இந்த தொடர்பாடலின் புதிய நுட்பங்களை காதலும் தனக்கு ஏற்ற விதத்தில் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. சமூக தொடர்பாடல் இல்லை என்றால் காதலின் தோற்றம் அவ்வளவுக்கு சாத்தியமாகிவிட்டது. சமூக தொடர்பாடலே காதலின் மூலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்து கடிதங்களினூடு பரிமாறப்பட்ட காதல் இன்று இணைய அரட்டை, மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளோடு இலகுபடுத்தப்பட்ட வழிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. நவீன தொடர்பாடல் நுட்பங்களில் இருக்கின்ற வேகமளவுக்கு அபாயங்களும் சேர்ந்தே இருக்கின்றன. வேகமான உலகில் வேகத்தை விரும்பும் பலர் அதற்குள் இருக்கின்ற அபாய எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. அதுவே பல சிக்கல்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகின்றது.
பேஸ்புக் காதலினால் காதலி தற்கொலை. காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலை. அரட்டை- மின்னஞ்சல் ஆதாரங்களை வைத்துக்கொண்டு காதலியையோ- காதலனையோ பலாத்காரம் செய்து ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க பெருந்தொகைப்பணத்தை கப்பமாக கோரியது இணையதிருட்டுக்கும்பல். இப்படியான செய்திகளை நாளாந்தம் ஊடகங்களில் காணக்கூடியவாறு உள்ளது.
மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் நட்பு ரீதியிலான குறிப்பிட்டளவிலான பேஸ்புக், ஸ்கைப் வடிவங்களினூடான இணைய அரட்டை இறுதியில் காதல் நிலையை எட்டுகிறது.இந்த இடத்தினை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் காதலையும் காதல் மொழிகளையும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
 பெண்ணிடத்திலோ- ஆணிடத்திலோ நேரடியாக காதலை சொல்ல பெருமளவானோருக்கு தயக்கமே. இந்த தயக்கத்தினாலே சொல்லப்படாமல் போன காதல்கள் மில்லியன் கணக்கில் இருக்கலாம். நேடியாக காதலை சொல்ல முடியாதவர்களுக்கு கொஞ்சம் திடத்தை வழங்கி காதலை சொல்ல வைத்தவை குறுந்தகவல்களும் இணைய அரட்டைகளும் சமூகதளங்களின் ஊட பகிரப்படும் தரவிறக்கங்களும் செய்திகளும் ஒரு குறிப்பிட்ட  நபரை நோக்கி மறைமுகமாக தங்களின் ஆர்வத்தை சொல்லி எதிர்தரப்பிடமிருந்து வருகின்ற எதிர்விளைவுகளுக்கு ஏற்ப தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அடுத்த கட்டத்திலும் இணையமே அதிகம் இருக்கின்றது.

பெண்களின் ஊடகப்பங்களிப்பு

ஏனைய துறைகளைப்போலவே ஊடகமும் தற்காலத்தில் உயரியவளர்ச்சியைப்பெற்றுள்ளது. இதில் பெண்களின் ஊடகப்பங்கேற்பு என்பது காலம் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டு வந்துள்ளதோடு அது ஆண்களுக்கு மட்டுமான குறித்து ஒதுக்கப்பட்ட துறையாகவும் ஆணாதிக்க செல்வாக்கை கட்டியெழுப்பியும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் அனேக பாகங்களில் ஊடக வாழ்க்கையை ஆண்களே தம் வசம் வைத்துள்ளனர். விதி விலக்காக சில பெண்களால் மட்டுமே ஆணாதிக்கம் நிறைந்த சில துறைகளில் சாதிக்கமுடிந்துள்ளது.
ஊடகம் என்பது பொதுமக்கள் பிரச்சனைகளை துணிவாகவும் உரிமையுடனும் தட்டிக்கேட்கும் உரிமை கொள்ளல் எனப்படுகிறது. அவ்வாறான உரிமை ஆண்கள் ஆதிக்கம் தான் தட்டிக்கேட்கவேண்டும். பெண்கள் தட்டிக்கேட்டால் பால் சமத்துவ நிலையைக்காட்டி மிரட்டிவிடுகின்றனர். அரசியல் வாதிகளுடன் ஆண் ஊடகவியலாளர்கள் மோதினால் உயிருக்கு ஆபத்து என்பார்கள் அதே வேளை ஒரு பெண் ஊடகவியலாளர் மோதினால் பெண்மைக்கு இழிவாக பேசுவார்கள். இவ்வாறான பால்வேறுபாடு ஏன்? அரசியலில் ஆண்களை விட பெண்கள் முன்நிலையில் நிற்கிறார் இந்த மாதிரி ஊடுகத்திலும் பெண்களுக்கு சமபங்கேற்பு கிடைக்கவேண்டும்.
பல ஊடக நிறுவனங்களில் பொது விடயம் சார்ந்த பிரச்சனைகளை ஆண்களிடம் தான் ஒப்படைப்பார்கள். அதே பிரச்சனைகளை பெண்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆண்களுடன் பெண்களும் சம பங்கேற்பு ஊடகத்தில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை எனில் ஊடகத்தை பெண்கள் ஏன் கற்கவேண்டும். பாரம்பரியமாகவே ஆண்களின் ஆதிக்கமானது பெண்களின் நடமாட்டத்தையும் பங்குபற்றலையும் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் பல்வேறுபட்ட உபாயங்களையும் வழிமுறைகளையும் பிரயோகித்து வந்துள்ளது.
மேற்கூறப்பட்ட பிண்ணனியில் ஊடகங்களில் பெண்கள் இல்லாதிருப்பதுடன் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பான கவனிப்பும் குறைவாகவே உள்ளமை தெளிவாகும். எனினும் பரந்த அணுகுமுறைகளுக்கமைய பெண்கள் வித்தியாசமான முறையில் ஊடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெண்கள் தனிமையாக அல்லது குழுக்களாக தமக்கு இயல்பான வகையில் ஊடகத்தளம் சார்ந்து செயற்படுகின்றனர். ஆணாதிக்கம் தழுவிய கருத்தியலை உள்வாங்கிக்கொண்ட ஆண்ஊடகவியலாளர்கள் சமூகத்தை கருத்தில் கொள்வதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்ஊடகவியலாளர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் ஊடகங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பதோ, பங்குபற்றல் என்பதோ முற்றிலும் பெண்நிலை சார்ந்த விடயமாக இடம்பெறுவதில்லை. அவ்வாறின்றிப் பெண்கள் தமது சுய திறமையாலும் தன்னாற்றல் மூலமும் இயல்பான ஊடகப்பிரவேசம் செய்வதென்பது முதன்மையாக காணப்படுகின்றது. ஊடகத்தளத்தில் அப்பால் ஏனைய நிர்வாகத்துறைகளிலும் இலங்கையில் பெண்களின் நியமனம் விதந்துரைக்கப்படுகின்றது.
இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன பெண்ஊடக அறிவிப்பாளர்கள் திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் முதலான பெண் அறிவிப்பாளகள் பல தரப்பட்டவர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.

Sunday, March 4, 2012

வெள்ளை மாளிகையில் அல்லி ராஜ்ஜியம்

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்கா பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பர். ஆனால் அவரது இன்னொரு முகத்தை பலரும் அறியமாட்டார்கள். அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால் அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆரம்பித்து அவரைப்பற்றியும் ஒபாமாவைப்பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுளளார் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடிகன்டார். இன்று வெளியாகியுள்ள தி ஒபாமாஸ் என்ற அந்தப்பகுதிகளை பெற்று ஏ.பி நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. அதில் மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் என்று கூறி சில சம்பவங்களையும் குறிப்பிட்டிக்கிறார்.
மேலும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி இமானுவேல். அதிபரின் முன்னாள் ஆலோசகர் ரொபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவக்காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பான கருத்து வெளியாயின. அந்தத்திட்டக்கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை. என்று இமானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால் மனம் நொந்த இமானுவேல் இராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால் அதை ஒபாமா  ஏற்றுக்கொள்ளவில்லை.இன்னொரு சமயம் அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும் என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.
ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது அவரிடம் மிசெஷல் வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போலே பல சம்பவங்கள் குறிப்பிட்டுள்ள நிருபர் கன்டார். இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந் நிலையில் புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில் சாதரணமாக நடந்த விடயங்களை மிகைப்படுத்தியும் கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons