வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்கா பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பர். ஆனால் அவரது இன்னொரு முகத்தை பலரும் அறியமாட்டார்கள். அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால் அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஆரம்பித்து அவரைப்பற்றியும் ஒபாமாவைப்பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுளளார் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடிகன்டார். இன்று வெளியாகியுள்ள தி ஒபாமாஸ் என்ற அந்தப்பகுதிகளை பெற்று ஏ.பி நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. அதில் மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் என்று கூறி சில சம்பவங்களையும் குறிப்பிட்டிக்கிறார்.
மேலும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி இமானுவேல். அதிபரின் முன்னாள் ஆலோசகர் ரொபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவக்காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பான கருத்து வெளியாயின. அந்தத்திட்டக்கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை. என்று இமானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால் மனம் நொந்த இமானுவேல் இராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால் அதை ஒபாமா ஏற்றுக்கொள்ளவில்லை.இன்னொரு சமயம் அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும் என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.
ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது அவரிடம் மிசெஷல் வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போலே பல சம்பவங்கள் குறிப்பிட்டுள்ள நிருபர் கன்டார். இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந் நிலையில் புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில் சாதரணமாக நடந்த விடயங்களை மிகைப்படுத்தியும் கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.



9:22 PM
உறவுகள்

0 comments:
Post a Comment