Sunday, January 15, 2012

அன்று போல இன்றும் சேரிப்புற மக்களின் வாழ்வு


பொருளாதாரம் , கல்வி , தொழிநுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டுவருகின்ற மாநகரமே சென்னை. இது தழிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தபோதும் இவ்வளர்ச்சிக்கு கரும்புள்ளியாக இடையிடையே காணப்படும் சேரிகள்.
சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாக கவனிப்பவரற்றவர்களாக பல தரப்பட்ட சேரிப்புறமக்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களது ஒருநாள்  வாழ்வு ஒரு யுகம் போன்று கழிந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் கூவையாறு ,நெடுஞ்செழியன், அயோத்தியநகர், பல்லவநகர் இந்த மாதிரி பலசேரிப்புறங்கள் உள்ளன. இந்த சேரிப்புறங்களில் வாழும் மக்கள் அடிப்படைத்தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பவற்றை தினமும் அனுபவிப்பது சிரமானதே என்றே கூறலாம். குப்பைகூழங்களை கொட்டுவதால் ஒரே இடத்தில் தேங்கிநி;ன்று துர்நாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கூவங்களை இக்கழிவுநீர் சென்றடைவதால் கூவம் ஆறு மாசடைந்து காணப்படுகின்றது. ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முன்னர் மிகவும் சுத்தமாக காணப்பட்ட இந்த ஆறுகள் இப்பொழுது கவனிப்பரற்று அனைத்துக்கழிவுகளையும் தன்னுள் உள்ளடக்கி அசுத்தமாக காட்சியளிக்கின்றது.
ஓவ்வொரு சேரிப்புறங்களும் மிகவும் சிறியது அதற்குள் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏதோ ஒரு எதிர்பார்ப்பிலே வாழும் அந்த மக்களில் பெரும்பாலும் பெண்களே தமது அன்றாடத்தேவைக்களுக்காக வெட்டப்பட்ட ஆடுகளின் கால்களினை எடுத்து அதில் உள்ள மயிர்களை அகற்றி அதனை நெருப்பில் சுட்டு விற்கிறார்கள். இதன்மூலம் நாளில் 200 ரூபா கிடைக்கின்றது. அந்தப்பணத்தில் தமது அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் சேரிப்புறப்பெண்கள்.
ஓவ்வொரு சேரிப்புறங்களிலும் 150 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் தேவைப்படும் அந்த மக்கள் மற்றைய காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரிகளாக காணப்படுகின்றனர். ஒரு பார்வையில் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் மறுபார்வையில் போலிவாழ்க்கையை நடத்;துகின்றனர் சேரிப்புறமக்கள். வேலை இன்றி வெட்டியாக இருக்கும் சில ஆண்கள் என இயல்பற்;ற சமூகம் பழியை அரசு மீது சாடும் நியாயமற்ற மனிதர்கள் தான் இவர்கள்.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், கோயில்கள், பல்கலைக்கழகங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது சிங்காரச்சென்னை. இதன் மறு பக்கமாக சேரிப்புறங்கள் இந்த சேரிகளில் வாழும் மக்கள் உண்மையில் வாழுகின்றனர் என்று கூறமுடியாது வாழப்போராடுகிறார்கள் என்பதே குறிக்கோளாகும். 

   

Friday, January 13, 2012

மாவிட்டபுரம் ஒரு பார்வை

யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தொலைவில் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. அங்கே கோயில் கொண்டருளும் ஆலயம் மாவிட்டபுரக்கந்தசுவாமி ஆலயமாகும். இது மா என்றால் குதிரைமுகம் நீங்கிய தலம் என்றும் கி.பி 07ம் நூற்றாண்டில் இந்தியதிசையுக்கிய சற்சன சோழப்பெருமன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுகம் நீங்கிய தலமே மாவிட்டபுரம்.
அரச குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து தேடிவந்து தரிசித்தனர் என்பதானாலும், மாருதப்புரவீகவல்லியின் கொடிநோய் நிங்கியதனாலும் நன்றிக்கடனாக இக்கோயிலைக்கட்டினார் என்றும் வரலாற்றுரீதியாகவும், வைபரீதியாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்தின் கட்டிடங்களும், சிற்பங்களும் மிகவும் பழமைவாய்ந்தாக காணப்பட்டது என்றும் 1990ம் ஆண்டில் வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடிக்கப்பட்டது என்றும் தற்போது அதன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இன்னும் 03 மாதகாலங்களில் அனைத்து சிலைகளும் நிறைவடைந்துவிடும் என்றும் ஆலயப்பரிபாலசபையினரான ஆனந்தயோகேந்திரன் தெரிவித்தார்.
மாவிட்டபுர மகோற்சவக்காலம் ஆடியில் இடம்பெறும்.15 வது தினமாகிய ஆடிஅமாவாசை அன்று முருகன் திருவுலாச்சென்றருளி மாவிட்டபுரத்தில் இருந்து 05 கிலோமீற்றர்தூரத்தில் உள்ள கீரிமலை புனித தலத்தில் தீர்த்தஉற்சவம் நடைபெறும். யாழ்ப்பாணக்குடாநாட்டில் இறைபதம் அடைந்தவர்களின் அஸ்தி எனப்படுகின்ற திதி செய்யப்படுதல் இந்தத்தீர்த்தத்தில் ஆகம். அதுவே ஆடிஅமாவாசை சிறப்புமிக்க விரதமாகும். தினந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன.

Thursday, January 12, 2012

பண்பாட்டு மண்ணில் பாரம்பரிய கலை


 ஈழத்தில்  பொதுவாக பாரம்பரிய கலைகள் மருவி வருகின்ற சூழ்நிலையில் யாழ் மண்ணில் தமிழர்  தம் வாழ்வியலை பிரதிபலிபக்கின்ற கலைவடிவங்களை இன்றைய இளம் சமுகம் மத்தியில்  தெரியப்படுத்தும் நோக்கில்  தென்னிந்தியாவின்  ஆதித்தமிழர் இயக்கத் தலைவர்  ஆடல் அரசு என்றழைக்கப்படுகின்ற வேணு அவர்கள்   யாழ் மண்ணில் நிகழ்த்திய ஆற்றுகை எம் பாரம்பரிய கலைகளுக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது
 யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும்  செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து ஒருங்கமைத்த  பாரம்பரிய கலைகளின் வடிவம் என்ற இந்நிகழ்சி யாழ்மண்ணில் பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது  
 முதலில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில்  அரங்கேற்றப்பட்ட இப்பாரம்பரிய  கலை வடிவங்களின்  ஆற்றகை பார்வையாளர்களின்  மனதில்  பெரும் களிப்பினை உண்டு பண்ணியது  அதனை தொடர்ந்து 2வது தடவையாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில்  அரங்கேற்றப்பட்ட போது  அங்கு பிற மாவட்டங்களை  சேர்ந்த  மாணவர்கள்  கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்  அவர்களின்  அவாவாக  இருந்தது இவ்வாறான கலைவடிவங்களின் ஆற்றுகைகளை   தமது பிரதேசங்களிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதே. மேலும் அவர்கள் கூறுகையில் இவ்வாறான கலைவடிவம்  பற்றி பாடப்புத்தகம்  வாயிலாகவே படித்திருந்த தமக்கு  முதன் முறையாக  தற்போது  தான் செயன்முறை  வடிவில் பார்க்கின்ற  வாய்ப்பை தமிழ்நாட்டு  கலைஞன் வழங்கியிருக்கிறார் என்பதே பொதுவாக நோக்கும்  போது இன்றைய காலகட்டத்தில்  பரதம் என்கின்ற பரதநாட்டித்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்  அதாவது மக்கள்  அதன் மீது  கொண்டுள்ள  ஈடுபாடு  அதை நிலைநாட்ட வேண்டும் என்பதில் காட்டுகின்ற  ஆர்வம் எமது பாரம்பரிய  கலைகள் மீது அவர்கள் வைப்பது இல்லை  இவ்வாறான சூழ்நிலை நிலவுகின்ற போது தமிழ் நாட்டின்  சென்னை பல்கலைக்கழகத்தினால்  நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற  முற்றம் கலைக்குழு என்ற அமைப்பினை   தற்போது  நிர்வகித்து வருகின்ற  ஆடல் அரசு என்கின்ற   வேணு  அவர்களை  கொண்டுஇ   சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்தில்  இவ்முற்றம் கலைக்குழவை  ஆரம்பித்து வைத்த  தற்போதய  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்  மற்றும் செயற்திறன் அரங்க இயக்கத்தின்  இயக்குனர் தே.தேவானந் அவர்கள்  இன்று  முன்னும் கொண்டு வந்துள்ளார்.
 புழுதியின் கீதங்கள் இ எல்லாம் சரிவரும் இ அக்கினி பெருமூச்சு இவண்டியும் தொந்தியும் இ எனபல்Nறு நாடகங்களை  நெறியாள்கை செய்து வருகின்ற தே. தேவானந் அவர்கள் தற்போது  பாரம்பரிய  கலைவடிவங்களை  எம் மண்ணில்  வளர்த்தெடுப்பதிலும் தன்னை  ஈடுபடுத்தியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாகவே தமிழ்நாட்டின்  நாட்டார் கலையாக விளங்குகின்ற பாரம்பரிய கலைவடிவங்களான  சாட்டைக்குச்சி இ தப்பாட்டம் இஒயில்இகும்மிஇ ஆதிவாசி நடனம் ஆகிய கலைவடிவங்களை   யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களையும்;  மற்றும் செயற்திறன் அரங்க இயக்கத்தின் நாடக மாணவர்களையும்  கொண்டு இக்கலை வடிவங்களை  அரங்றே;றுவதற்கு திட்டமிட்டு  அதில் வெற்றியும் கண்டுள்ளார். இப்பாரம் பரிய கலைவடிவங்களை  ஈழத்தமிழர் மத்தியில்  கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலுக்கான மீள்குடியேற்றம்

வடக்கில் 15 வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்;ந்த நாகர்கோவில் மக்கள் கடந்த உள்ளராட்சி தேர்தல் முன்னிட்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சொந்தஇடங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் சிலரின் அனுபவங்கள் சிலவற்றை அறிந்து கொள்வதற்காக அக்கிராமத்திற்கு சென்றிருந்தோம். அக்கிராமத்தை சென்றடையும் போது மனதில் பல காட்சிகள் தோன்றின. தகரத்தினால் வேயப்பட்ட சின்னஞ்சிறிய குடிசைகள் ஆங்காங்கே  தென்பட்டன. எங்கும் கண்ணிவெடி அபாயம் என்ற பதாகைகளை தான் காணமுடிந்தது.
     தொடர்ந்து பல குடிசைகளைத் தாண்டிச்சென்ற போது கடற்தொழிலாளியான இமானவேல் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அக்கிராமம் பற்றிய விடயங்களை அவர் அதிகமாகவே அறிந்திருக்கிறார். 1996 ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் கடந்த ஆனி மாதம் 23ம் திகதி இக்கிராமத்தில் 90 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன 30 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது; என்றும் அவர் குறிப்பிட்டார். இம் மக்களுக்கு ;சோபா நிறுவனம் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத்தேவைகள் 06 மாத காலமாகியும் பூர்த்தி செய்யப்படவில்லை; ஆரம்ப கட்டமாக குடிநீர்வசதி, மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.                     தொடர்ந்து குடும்பப்பெண்ணான செல்வமாலினி என்பவரை சந்தித்தோம். எமது கேள்விகளுக்கு சலித்துக்கொள்ளாமல்  பதி;ல் கூறத்தொடங்கினார்.  எனக்கு இரண்டு குழந்தைகள் எனது கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக இருக்கிறார். ஒரு நாள் வருமானம் 600 ரூபா எமக்கு இந்த வருமானம் போதாது உள்ளது. உலர் உணவு என்பது இது வரைக்கும் கிடைக்கவும் இல்லை மிகுந்த சிரமத்தைஎதிர்நோக்குவதாக வும் கூறினார்.      
15வருடங்களுக்கு முன் பிருந்த சொந்தங்கள்; மீண்டும் கிடைக்குமா? என்றார் கணேசலிங்கம். நாம் இங்கு வந்த 05 மாத காலங்கள் இது வரைக்கும் 12 தகரங்களுடன் அரைவீட்டுத்திட்டம் கிடைத்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடுகளிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.ம் 12தகரங்கள் கொடுக் கப்பட்டு அரைவீட்டுத்திட்டம் கிடை த்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடு களிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியே ற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

மறக்கமுடியாத இந்தியப்பயணம்

எமது ஊடகப்பயணமானது இரண்டாவது தடவையாக தமிழ்நாட்டுப்பயணம். இந்த ஊடகப்பயணத்தில் இந்தியா சென்று யாழ்ப்பாணம் வரும் வரை பல அனுபவங்கள் தோன்றியுள்ளது. கொழும்புப்பயணத்தின் அனுபவப்பகிர்வு யாழ்ப்பாணம் வந்தும் மறப்பதற்கு ஒரு வாரம் சென்றது. இது தமிழகப்பயணமல்லவா? அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? யாழில் இருந்து கொழும்பு செல்லும் போது சாதரணமாக இருந்தது. ஆனால் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கி  இருந்த இடங்களில் சின்னத்தூக்கம் போட்டது இன்றும் மறக்கமுடியாதது  காலை 04.00 மணியளவில் விமானநிலையத்தினுள் நுழைந்தோம்.  சென்றதும் விமானமா? எத்தனைபதிவுகள், எத்தனை சோதனைகளின் பின்னர் அங்கு விமனத்திற்கு செல்வதற்கென பதிவுகளை செய்து விமானத்தில் பயணித்தது புது அனுபவம். காலை 08.30 மணிக்கு எமது கால் சென்னை விமானநிலையத்தில்  பதிந்தது. சிறுது ரேம் என் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து சென்றது.  அங்கிருந்து சென்னை சாந்தோம் தங்குமிடத்திற்கு சென்றோம்.  எல்லோரையும் ஒரு மணிநேரத்தின் பின்னர் ஓய்வு எடுத்து விட்டு வருமாறு பணிக்கப்பட்டோம்.  எனக்கு  ஒரு மணி நேரம் போதாது போல் இருந்தது. என்ன செய்வது குட்டித்தூக்கம்  போட்டோம். அதிகாலைச் சூரியனில் கடற்கரை மணல் மீது நின்று மெரினாவில் உடற்பயிற்சி செய்த அனுபவம் புதியது. காது இனிக்க கேட்க கடலலை ஓசை உடலில் படும் உப்புக்காற்று உற்சாக மூட்ட நண்பர்களோடு இணைந்து செயற்பட்டோம்.
முதல் நாள் சேரிப்புறங்களுக்கு களப்பயிற்சிக்காக செல்வதற்கான ஏற்பாடு சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாமும் சென்றோம் சேரிக்கு சென்றது எனக்கு புதிய அனுபவம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி கதைப்பது என்பது மிகவும் கஷ்ரமாக இருந்தது. அவ்வாறான நிலையில் மூன்று தொலைபேசியைக்கொண்டு நாளுக்கு இரண்டு நாள் கதைப்போம். அதுவும் நாங்களாக எடுக்க முடியாது. அவங்கள் எடுத்தால் மட்டும் 05 நிமிடம் பேசுவோம். எல்லோரிடமும்  கொடுத்து வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. 
சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து நாம் தங்கியிருந்த இடம் வரை நண்பர்களோடு இணைந்து ஒரு நாள் நடந்தே சென்றோம் இது ஒரு அனுபவம்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் இனைந்து சென்னையின் நகர் பகுதிகளிற்கு பயணம் செய்து அவர்களுடனும் எமது மாணவர்களுடனும் சேர்ந்து நான் சினிமாவில் பர்த்த இடங்களை நேரில் பார்த்தேன். சினிமாவில் இந்த இடங்களை பார்க்கும்  போது ஆசையாக இருக்கும். இது வரைக்கும்  இலங்கையில்  கூட பல இடங்களுக்கு செல்லவில்லை. வரலாற்று இடங்களை பார்வையிட்ட இடங்கள் ஒவ்வொன்றுமே மிகவும் பயணுள்ள இடங்களாக அமைந்ததோடு புதுப்புது இடங்களாகவும் புதிய அனுபவங்களையும் தந்தது. ஆனால் சென்றவுடன் தர்மினி அக்கா எங்களிடம் சுநிழசவ கேட்பா அதனால் பஸ் ஓட ஓட எழுதியது மறக்கமுடியதாதது.
இறுதி நாளன்று இந்தியாவை விட்டு இலங்கை வருவதற்கு தயாராகி சென்னை சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி ஒன்று கூடல் இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் முன்னரே எமது இயக்குணர் தே. தேவானந் சேர் கூறினார் இன்று எமக்கு இலங்கை செல்வதற்கு 03.00 மணிக்கு விமானம் பதியப்பட்டுள்ளது நாம் அனைவரும் 12.00 மணிக்கு விமான நிலயத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு முன்னர் நாம் இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானப்பதிவுப்பத்திரத்தை எடுக்கவேண்டும் அதனால் நாம் எல்லோரும் 11.00 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு விட என்று கூறினார். 
பழகினர்வர்களை பிரிவது என்பது எல்லோருக்குமே கஷ்டம் தான். அன்று எல்லோருமே பயணத்தை மறந்து தாம் பழகிய உறவுகளுடன் கூடிக்கதைப்பதுவும் தமது குறிப்புத்தகத்தில் ஓட்டோகிறாப் வாங்குவதுமாக நின்றதனால் ( நானும் தான் ) நாம் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மீளப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் சென்று விட்டது. ஒரு வாறாக படிவங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு 01..30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இந்திய விமான நிலயத்திற்கு செல்ல புறப்பட்டு அங்கு 02.05 மணிக்கு போய் சேர்ந்தோம். சென்னைப்பல்கலைக்ழக மாணவர்கள் எம்முடன் கூடவே வந்து அனுப்பி வைத்தார்கள்.
அங்கு எமக்காக விமான நிலைய ஊழியர்களும் அவசர அவசரமாக எம்மை சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள் உள்ளே அவசர அவசரமாக எமது பரிவுகளை மேற்;கொண்டார்கள். அந்த வேளை எனது பொதிப்பை பிரிந்து விட்டது. அதற்குள் இவ்வாறு ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வேதனைப்பட்டு 250.00 ரூபா செலுத்தி பதிவுகளை மேற்கொண்டேன். அந்த நிகழ்வு பற்றி நான் வீடு சென்றும் எல்லோருக்கும் சொல்லியது மறக்கமடியாதது.  எல்லாருமே பதிவுகளை முடித்து விட்டு  ஒரு வாறு விமானத்தினுள் ஏறிக்கொண்டோம்.  நாங்கள் சென்னை செல்லும் போது காதுகள் எல்லாம் அடைத்தன. ஆனால் இலங்கைக்கு வந்த சந்தோசத்தில் விமானப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. 04.30 மணிக்கு இலங்கை விமானநிலையத்தில் இறங்கினோம். ஆனால் யாழ்ப்பாணம் வருவதற்கு பஸ்ஸிற்கு காத்திருந்தது ஒரு மணிநேரம். 06.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினோம். யாழ்ப்பாணப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது.


 

பண்பாட்டில் மாறாத பழங்குடியினர்

நாட்டின் வளரச்சியில் தனித்துவம் மிக்கவர்கள் ஆண்களே. பெண்வழி சமுதாயத்தின் பின்வழி என்று பேசப்படும் இடம் தான் இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி என்னும் பிரதேசம். கடந்த மாத இறுதியில் யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய முழுநேரகற்கைநெறி மாணவர்கள் கற்கை நெறியின் ஒரு பகுதியாக 15 நாட்களை கொண்ட தமிழ்நாடு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்தோம். அந்த வகையில் நீலகிரி       மாவட்டத்தில்   உள்ள ஊட்டிக்கு சென்றிருந்தோம்.
அங்கு குறும்பர,; இருளர.; தோட்டாஸ் என்கின்ற பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வியல் சம்பந்தமாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எழுத்து வடிவமே இல்லாத ஒரு மொழி இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இம் மக்கள் பேசுகின்ற மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. பெயரில்லாத ஒரு வகை மொழியினை பேசிக்கொள்கின்றனர். எழுதுவதற்கு இன்று தமிழையே பயன்படுத்தி வருகின்றனர்.
இம் மக்கள் ஆரம்பத்தில் படிப்பறிவற்றவர்களாக காணப்பட்டனர்.  காட்டில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல,; சுள்ளிபொறுக்குதல், போன்றவற்றை தொழிலாக கொண்டிருந்தனர். படிப்படியான முன்னேற்றம் இவர்களது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இவர்கள் வாழ்கின்ற காட்டுப் பகுதி அரசசொத்துடமை ஆக்கப்;பட்டுள்ளது. இந்த மக்கள் பாரம்பரியமாக வாழ்கின்ற இடத்திலிருந்து எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இவ் வனப்பிரதேசத்தில் சுள்ளி பொறுக்கவதற்கும், வேட்டையாடுவதற்கும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கலாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இவர்கள் வேறு இனப்பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்வதி;ல்லை. இருளர் இன மக்கள் மாமன் பெண்னை அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டும். இன்று குறும்பர் இனத்தவர்கள் வேற்றுத்திருமணத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இவர்களின் வீட்டிற்கு செல்பவர்கள் திண்ணை மட்டுமே செல்லமுடியும். உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இறைவனின் எழில் ஓவியங்களாய் பரந்து விரிந்து கிடக்கும் கிராமங்களில் வாழும் மக்களையும் அவர்களின் மரபு மொழிநடை பழக்கவழக்கம், பண்பாடு, நம்பிக்கை, சமய கலாச்சாரம், தொழில் வேடிக்கை வினோதம் கலை இலக்கியம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் பிம்பங்களே கிராமிய பாடல்கள். இத்தகைய பாடல்கள் இருளர் குறும்பர் இனத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
இவர்களுக்கு மரணம் சம்பவித்தால் எமது முறைகளை போல சில இறப்புக்காரியங்களை நிறைவு செய்த பின்னர் அவர்கள் அடக்கம் செய்வார்கள். கிரேக்கத்தில் காணப்பட்டது போன்று இறந்தவர்களை வழிபட்டால் அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டால் அதீத சக்தி கிடைக்கும் என எண்ணிக் உட்கொண்டனர். இவர்கள் அவர்களை போல் இல்லா விட்டாலும் அடிப்படை பண்பான நம்பிக்கை இறந்தவர்களினால் அதீத சக்தி கிடைக்கும் என்பதிலிருந்து பிறக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலானவர் கடவுள் என எமது சமுதாய மரபுகளின் படி வணங்குகின்றோம். இவர்கள் தமது மூதாதையர,; இறந்தவர்களை வணங்கி வளிபட்ட பின்னரே இரண்டாவதாக கடவுளை வணங்குகின்றனர்.
நாட்டின் தனித்துவம் மிக்கவர்கள் என பலநாடுகளில் போற்றப்படும் ஆண் சமுகம் இவர்களிடத்தில் இரண்டாவதாகவே பார்க்கப்படுகினறது. இங்கு தாய் வழி சமுதாய முறைமை பின்பற்றப்படுகின்றது. எந்த முடிவை எடுப்பதாயினும் அதை பெண்னே தீர்மானிப்பதாய் அமைகின்றது.
இன்று திருமணத்திற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது வரதட்சணை. பல பெண்கள் திருமண வயதை அடைந்தும் வாழ்ககை துணையில்லாமல்  வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமையோ மாமியார் கொடுமையோ இல்லை.
ஆன்மா ஒடுக்கும் இடம் தான் ஆலயம். இந்த ஆலயத்தில் தோட்டஸ் பழங்குடி இனப் பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கல் ஒன்று நடப்பட்டுள்ளது. அந்த கல்லை தாண்டி பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது.
மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த பழங்குடியினர் தம்மை மாற்றி அமைக்க முயல்கின்றனர். இன்று யாவரும் ஓரளவிற்கு எழுத்தறிவு, வாசிப்பு வீதத்தினை பெற்றுள்ளனர். தமக்கான ஒரு மொழி இருந்தாலும் தமிழை எழுதுவதால் இன்று கதைத்து தேர்ச்சி அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இவர்களின் சமுகத்தில் இருந்து தாதியர,; ஆசிரியர், சட்டத்தரணி, வைத்தியர் என பல்துறையிலும் உருவெடுக்கின்றனர். காலப்போக்கில் இவர்கள் கல்வி முறையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும்.
இம் மக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. சுற்றுலாப்பயணிகளால் அசுத்தம் செய்யப்படும் நீரினையே வடிகட்டி பாவித்து வருகின்றனர்.
அரசாங்கத்தினால் இவர்களுக்க நில ஒதுக்கீடு இன்னும் வழங்கப் படவில்லை. தற்போது இவ் விடத்தை விட்டு எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர் என வருத்தத்துடன்  கூறினார்கள்  மின்சார வசதிகளுக்கு அரசின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பாரம்பரியமாகவாழ்ந்து வருகின்ற இடம் அரச சொத்துடமை ஆக்கப்பட்டுள்ளமையால் சொந்த இடமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு வகை மொழி பேசினாலும் எழுத்து வடிவம் இன்மையால் காலப்போக்கில்  இவர்களது மொழி அழிவடைய கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்த மக்கள் வாழ்வியலில் முன்னேற்றம்  ஏற்பட்ட போதும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது வரவேற்கத்தக்கதே.

மீளாத நிலையில் மீள்குடியேற்றம்

தொலைந்து போன வசந்தங்களை தேடி தெல்லிப்பளை கிராம மக்கள் நகர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 8 கிலோ மீற்றர் வடக்கே அமைந்துள்ள தெல்லிப்பளை கிராமம் 21 வருடற்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின்கட்டுப்பாட்டிலிருந்து இன்று மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் . 21 வருடற்களாக தாய் நிலத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்காத மக்கள் அலைகடல் போல் திரண்டு செல்கின்றனர்
இயந்திரப்பறவைகள் போட்ட குண்டுகளால் சிதைந்து போன சிதைந்து போன வீடுகளும் ஓங்கி வளர்ந்த மரக்கூட்டத்தையும் தவிர வேறு  எதுவும் இல்லை.யாழ்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் பனக்கூட்டங்களும் வீடுகளின்
எஜமானாய் வரவேற்க காத்திருக்கும் பாம்புகளின் ஆவலையும் கான முடியும் .
மிதி வெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் கால்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் காலம் வந்ததும் வாக்குகளை பெறுவதற்காக உதவி என்ற பெயரிலே வாக்கு கேட்கும் வேட்பாளர் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது .
இவர்களுக்கு இவ்வாறு சின்ன சின்ன உதவிகள் தேவையில்லை. 21 வருடம் அகதி முகாம்களில் வாடனை வீடுகளில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் இவர்கள் அலைந்து திரிந்து ஓய்ந்த நிலையில் நிம்மதியான வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.

 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons